அக்குறணை அஸ்ஹர் கல்லூரி
அறிவுப் பொழிலின் குயில்கள் நாம்
அருமைக் கலையும் பண்பாடும்
அலரும் கீதம் நம் கீதம்
மாண்புயர் எங்கள் கலைக்கூடம்
மலையம் காணும் ஒளியாகும்
தீன் சுடர் வீசும் அக்குறணை
சிறப்பின் சின்னம் இதுவாகும்
கடல் மலை ஆறுகள் பாடும் (II)
கலாசாரம் புகழ் பேசும்
எழில் நாடாம் நம் இலங்கைத் தாய்
ஏற்கும் அன்புச் சேய்கள் நாம்
பயில்வோம் பாரில் பல்கலையும்
பண்பால் உயர்வோம் பயன் பெறுவோம்
அன்பால் இதயம் ஒன்றாகிடுவோம்
நாம் அனைத்தும் வெல்லும் துணிவுறுவோம் (II)
கட்டுப்பாடும் கண்ணியமும்
கனிவாய் தரும் நம் கல்லூரி
வெற்றிப் பாதை இட்டேகும்
வேட்கையுடன் முன்னேறிடுவோம்
அல்லாஹ்வை நாம் புகழ்ந்திடுவோம்
நம் அருள் நபி மேல் ஸலவாத்துரைப்போம் (II)
ஸல்லல்லாஹு அலா முஹம்மத்
ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
ஸல்லல்லாஹு அலா முஹம்மத்
ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
ஸல்லல்லாஹு அலா முஹம்மத்
யாரப்பி ஸல்லி அலைஹி வஸல்லம்
Lyricist
-M.C.M SUBAIR-